கனடாவில், கழிவுக் குழியில் வீழ்ந்த மானை மீட்ட அதிகாரிகள்
கனடாவின் ரொறன்ரோவில் கழிவுக் குழியொன்றில் வீழ்ந்த மானை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குறித்த மானை மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 30 அடி ஆழமான கழிவுக் குழிக்குள் குறித்த மான் சிக்கிக் கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் மானை மீட்க மேற்கொண்ட முயற்சியின் போது அந்த மான் பதற்றமடைந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் இதனால் மீட்கும் பணிகள் சவால் மிக்கதாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீட்பு பணி காட்சிகள் உள்ளடங்கிய காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மிருக வைத்தியர்களும் இந்த மீட்பு பணியில் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 200 பவுண்டு எடையுடைய மான் ஒன்றே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மான் எவ்வாறு இந்த கழிவுக் குழிக்குள் விழுந்தது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த மானுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.