நாம் கோழைகள் அல்ல... உலகிற்கு தெரிவிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது! பிரான்ஸ் அதிபர்
ரஷ்ய - உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில், மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசிற்கு சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அந்நாட்டின் அதிபர் பீட்டர் பவெலை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பிற்கு பிறகு அதிபர் மேக்ரான் தெரிவித்ததாவது,
ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைனை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகளாக கூடாது.
நாம் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது. இது நமது போர். நடப்பது நடக்கட்டும் என நாம் கண்டும் காணாமல் எவ்வாறு இருக்க முடியும்?
இந்நிலையில் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் துருப்புகளை இறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என நான் முன்பு கூறினேன். அந்த நிலையில் நான் பின் வாங்க மாட்டேன்.
நாம் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இல்லை. உக்ரைனில் நிலைமை சீரடைவதையே நாம் விரும்புகிறோம்; மோசமடைவதை அல்ல.
சர்வதேச சட்டங்கள் எதையும் மீறி அதனால் ஐரோப்பாவின் நிலைமை வலிமை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு மேக்ரான் தெரிவித்தார்.