எதிரியை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; ஜனாதிபதி ட்ரம்ப்
எதிரியை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்; எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னரை சந்தித்த பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் பேசுகையில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுக்கு பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்று இருக்கின்றனர்.

வாஷிங்டனில் இருவருக்கு அமெரிக்க ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவிக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வரவேற்பு அளித்தார்.
அப்போது ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: நாங்கள் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எதிரியை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்.
அந்த எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் என்னை விடவும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் திட்டவட்டமாக இருக்கிறார்.
எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் பேசினார்.
அமெரிக்க நாடாளுமன்றின் கூட்டுக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ், ஜனாதிபதி ட்ரம்ப்பங்கேற்கின்றனர். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.