இடைக்கால அரசாங்கத்தை ஏற்கமாட்டோம்; பங்களாதேசில் மாணவர்கள் போராட்டம்!
பங்களாதேசில் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் புதிய தேர்தல் இடம்பெறும் என பங்களாதேசின் இராணுவதளபதி அறிவித்திருதார். இந் நிலையிலேயே மாணவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
இராணுவ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
அதோடு இராணுவம் தலைமைவகிக்கும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என போராடும் மாணவர்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நோபல்பரிசுபெற்ற முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலேசகாராக நியமிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை பங்களாதேசில் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பதவியை இராஜினாமா செய்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார்.
வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.