100 நாட்கள் ஒரே ஆடை அணிந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெண்! எதற்கு தெரியுமா?
பாஸ்டன் நகரை சேர்ந்த சாரா என்ற பெண், 100 நாட்களுக்கு ஒரே உடையை அணிந்து கொண்டு விதவிதமாக போட்டோக்களை பதிவேற்றம் செய்து, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். வூல் அண்ட் என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம், போட்டி ஒன்றை நடத்தியுள்ளது.
அதில் 100 நாட்கள் ஒருவர் ஒரே ஆடையை அணிந்து சவாலில் வெற்றி பெற்றால், புதிய உடைக்கு 100 டாலர் வவுச்சரை வெல்வார்கள். இரவில் மட்டும் ஆடையை துவைத்து காய வைத்துக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த சவாலை ஏற்ற சாரா, செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 100 நாட்கள் அந்த ஆடையை மட்டும் அணிந்து கொண்டு சவாலில் வென்றார்.
இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அது லைக்ஸ்களை குவித்தது. சாரா பார்பின்ஸ் – கோல் என்ற பாஸ்டன் நகர் பெண், தொடர்ந்து 100 நாட்கள் ஒரே ஆடையை அணிந்திருந்தார். வேலை நேரம், வாக்கிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் அந்த ஆடையை அணிந்திருந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.
அவர் 100 நாட்களும் அணிந்திருந்தது கருப்பு நிற ரோவனா டிரஸ். ஒவ்வொரு முறையும் அந்த ஆடையை அணியும் போதெல்லாம், தனது ஸ்டைலை மட்டும் மாற்றிக் கொண்டார். சில நேரங்களில் ஸ்கட், மற்ற நேரங்களில் பேண்ட் அணிந்து கொண்டார்.
ஆடை நிறுவனம் நடத்திய சவாலை ஏற்று அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து சாரா கூறுகையில், ‛‛சமூக ஊடகங்களில் இந்த சவால் குறித்து முதலில் பார்த்தேன்.
இதனை நம்மால் ஏன் பண்ண முடியாது என நினைத்து, பின் துணிவான முடிவை எடுத்தேன்’’ என கூறுகின்றார்