கடற்கரையில் உலாவ சென்றவரிடம் சிக்கிய 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொதி
இங்கிலாந்தின் வேல்ஸ் கடற்கரையில் உலாவ சென்றவர் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்து பொதிகளை மீட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கைப்பற்றப்பட்ட 30 பொதிகள் தொடர்பில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சர்வதேச போதை மருந்து வட்டத்திற்கு இதில் தொடர்பு இருக்கும் என்றே அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுகிறது.
அதிகாலையில், வழக்கமான நடைப்பயிற்சிக்கு அந்த நபர் சென்றுள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே கருப்பு வண்ணத்தில் 30 பொதிகளை அவர் காண நேர்ந்தது.
முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவை, உயர் தர போதை மருந்து என உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்து கடற்கரையில் பிரித்தானியாவில் இருந்து செயல்படும் குழுக்களால் இது முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், மோசமான வானிலை காரணமாகவே, அவர்களின் பார்வையில் இருந்து இந்த பொதிகள் மாயமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
30 பொதிகளின் மொத்த அளவு என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் அந்த போதை மருந்தின் மதிப்பு 100 மில்லியன் பவுண்டுகள் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.