பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற முதல் மந்திரிக்கு நேர்ந்த நிலை!(Video)
பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்தது சர்ச்சையாகி இருக்கிறது.
குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காக அடிக்கடி பிரதமர் மோடி குஜராத் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, மோடியின் காரில் ஏற முயன்ற அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Look at what an elected CM has to face. If a BJP CM has to undergo this treatment from Modi ji, then imagine the plight of common man! ? pic.twitter.com/tDLSeZTiJE
— YSR (@ysathishreddy) October 24, 2022
வீடியோவில், குஜராத் முதல் மந்திரி பிரதமரின் காரில் ஏறமுயற்சிப்பதை காணலாம், பாதுகப்பு அதிகாரிகள் படேலை காருக்குள் நுழைய விடாமல் தடுப்பதைக் காணலாம். ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரி என்ன எதிர்கொள் என்று பாருங்கள். ஒரு பாஜக முதல் மந்திரி மோடி ஜியிடம் இந்த அவமானம் பெற வேண்டும் என்றால், சாமானியர்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்!" என்று டிஆர்எஸ் தலைவர் ஒய்எஸ்ஆர் டுவீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், "படேல் சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது, குஜராத் முதல் மந்திரி காருக்குள் உட்கார விரும்பினார், ஆனால் காரின் பின்னால் ஓடுங்கள், நீங்கள் என் பக்கத்தில் உட்காரத் தகுதியற்றவர்" என்று பிரதமர் கூறினார்,'என கூறி உள்ளார்.
படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.