பிரான்ஸ் பொலிசாரின் வாகனம் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் பொலிசாரின் வாகனம் மோதியதில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் மார்ச் 6 ஆம் திகதி Blanc-Mesnil (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் நேரப்படி பகல் 1 மணி அளவில் இங்குள்ள avenue Charles Floquet வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் வீதியை கடக்க முற்பட்டபோது விரைவாக வந்த பொலிஸ் வாகனம் சிறுமியுடன் மோதியதில் , சிறுமி தூக்கி வீசப்பட்டாள். இதனையடுத்து உடனடியாக மருத்துவ உதவிக்குழு அழைக்கப்பட்டு, சிறுமி துரிதமாக பரிஸ் 15 இல் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, இன்று ஞாயிற்றுக்கிழமை வரை தொடருர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குற்றவாளி ஒருவரை காவல்துறையினர் துரத்திச் சென்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கபட்டுள்ளது.