அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக வடகொரியா செய்த காரியம்
இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவில் உள்ள தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகத்தை ஆய்வு மேற்கொண்ட அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு அறிவித்தபடி, ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என்று கூறினார்.
இதன்படி இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் இதற்காக இரண்டு கட்ட செயற்கைக்கோள்கள் பறிசோதனையிலும் வடகொரியா ஈடுபட்டுள்ளது. தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காகவே இந்த செயற்கைக்கோள்கள் ஏவ உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
