உலகின் மிகச்சிறிய வீட்டில் வசித்த யூடியூபர்; பிரபலம் ஆக என்னவெல்லாம் பண்றாங்க!
ரியான் டிராஹான் என்ற யூடியூபர், உலகின் மிகச்சிறிய வீட்டில் 24 மணி நேரம் வசித்து சாதனை படைத்துள்ளார். அந்த கையகல வீட்டில், நடந்ததை தனது யூடியூப் பக்கத்தில் அவர் பதிவேற்றம் செய்ய அது வைரலாக பரவி வருகிறது. அதில், ரியான் டிராஹான் தனது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்களையும், ரசிகர்களையும் வாழ்த்திய பின், உலகின் மிகச்சிறிய ஏர்பின்பில்லுக்குள் நுழைகிறார்.
வெறும் 25 சதுர அடி பரப்பளவில், உருவாக்கப்பட்டிருந்த அந்த குட்டி வீட்டில், அடுப்பு, கழிப்பறை, மினி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு 24 மணி நேரம் தங்கியிருந்த தனது அனுபவத்தை 10 நிமிடங்கள் விவரித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இது உலகின் மிகச்சிறிய வீடு என்பது உண்மை தான். இதற்குள் நான் 24 மணி நேரத்தை செலவிட்டேன்.
வீடு எப்படி இருக்கும் என அனைவரும் ஆசைப்படுவீர்கள். சிறு ஜன்னல், கழிப்பறை, ஒரு அடுப்பு இதற்குள் இருந்தது. நான் உலகின் சின்ன வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கியிருந்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் நன்றாகவே இருக்கிறேன் என அவர் கூறினார்.
வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர், வீட்டை உருவாக்கிய ஜெப் என்பவரை சந்தித்தா். வீட்டில் இருந்த போது, பீட்சாவை ஆர்டர் செய்து, தனது நண்பர்களுடன் அதனை சாப்பிட்டு மகிழ்ந்தார்.
இந்நிலையில் அவரது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன்
இதுவரை இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.