பத்திரிகையாளர்களுக்கு வெள்ளை மாளிகை விதித்த கட்டுப்பாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், உணர்திறன் மிக்க விடயங்களின் பாதுகாப்பு காரணமாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை அலுவலகத்தின் முக்கிய பகுதியை நிருபர்கள் அணுகுவதற்கு தடை விதித்துள்ளது.
பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்டின் அலுவலகம் அமைந்துள்ள அப்பர் பிரஸ் என்று அழைக்கப்படும் மேற்குப் பகுதியை அணுகுவதற்கு முன் அனுமதி பெறாத பத்திரிகையாளர்களுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு பணிப்பாளர் ஸ்டீவன் சியுங்இந்த நடவடிக்கையை ஆதரித்து நிருபர்கள் அந்தப் பகுதியில் இரகசியமாக காணொளி மற்றும் குரல் பதிவுகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகை சுதந்திரத்திற்கும், சுதந்திரமான செய்தி சேகரிப்பை நடத்தும் திறனுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி 30 செய்தி நிறுவனங்கள் பென்டகன் கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.