ஐந்து ஜனாதிபதிகளுக்கு சமையற்கலைஞராக செயற்பட்டவர் மரணம்
அமெரிக்க வெள்ளைமாளிகையில் ஐந்து ஜனாதிபதிகளுக்கு சமையற்கலைஞராக பணியாற்றிய Roland Mesnier என்பவர் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வயது 78 என கூறப்படுகிறது. வெள்ளைமாளிகையில் வரும் விருந்தினர்களுக்கும் இவரே பேஸ்ட்ரி சமையல்காரராக செயற்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் வரலாற்று சங்கம் சனிக்கிழமை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது, அவர் நோய்வாய்ப்பட்டு சில நாட்கள் படுத்திருந்ததாகவும் அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இறந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளைமாளிகையில் மிக நீண்ட காலம் பேஸ்ட்ரி சமையல்காரராக செயற்பட்டவர் Roland Mesnier என கூறப்படுகிறது. 1979ல் அப்போதைய ஜனாதிபதியின் மனைவி ரோசலின் கார்ட்டர் இவரை பணியில் அமர்த்தியுள்ளார்.
இதன் பின்னர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் Roland Mesnier ஓய்வு பெற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, வெள்ளைமாளிகையில் முன்னெடுக்கப்படும் விருந்துகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான இரவு உணவு உள்ளிட்ட வேளைகளிலும் வகை வகையான இனிப்புகளை Roland Mesnier தயாரித்து அளித்துள்ளார்.
வெள்ளைமாளிகையில் பணி என்பதால், ஓய்வுக்கு நேரம் இருக்காது எனவும், எப்போது அழைக்கப்பட்டாலும், பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும்,
அது கிறிஸ்துமஸ் பண்டிகையாக இருக்கட்டும், பிறந்தநாள், தாயாரின் நினைவு நாள், அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் எதுவாக இருந்தாலும், வெள்ளைமாளிகையில் நமது தேவை இருந்தால், கண்டிப்பாக அன்றைய நாள் நாம் பணிக்கு தயாராக வேண்டும் என நேர்காணல் ஒன்றில் Roland Mesnier ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.