கனடாவின் அடுத்த பிரதமர் யார்? இரு கட்சிகளிடையே கடும் போட்டி
மார்க் கார்னி கனடாவின் தற்போதைய பிரதமர் என்றாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.
அவர் சார்ந்த லிபரல் கட்சியின் முந்தைய தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதால் கார்னி பிரதமர் ஆனார் அவ்வளவுதான்.
ஆக, முறைப்படி தேர்தலில் வெற்றி பெறுபவர்தான் அடுத்து கனடாவில் பிரதமர் ஆக முடியும்!
இந்நிலையில், மார்க் கார்னி கனடாவின் அடுத்த பிரதமராவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
அதற்குக் காரணம், பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் ஆளும் லிபரல் கட்சிக்கும் இடையே மக்கள் ஆதரவில் வெறும் இரண்டு புள்ளிகள்தான் வித்தியாசம் நிலவுகிறது.
ஆம், DailyMail ஊடகம் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், மார்க் கார்னிக்கு மக்களிடையே 39 சதவிகித ஆதரவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் Pierre Poilievreக்கு 37 சதவிகித ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
கனடாவில் இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன.
அந்த காலகட்டத்தில் மக்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆக, தேர்தலில் வெற்றி பெற்று கனடாவின் அடுத்த பிரதமராக ஆக இருப்பது மார்க் கார்னியா அல்லது Pierre Poilievreஆ என்பதை மக்கள்தான் முடிவு செய்ய இருக்கிறார்கள்!