யுக்ரேன் மீது ரஷ்யா போர்தொடுத்தது ஏன் ? காரணியும் அதன் பின்னனியும்!
யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதற்கான காரணியும் அதன் பின்னனியும் வெளியாகியுள்ளது.
யுக்ரேன் போர் ஏன்?
நேட்டோ உறுப்பு நாடுகளில் யுக்ரேன் இணைவதே ரஷ்ய போருக்கான காரணம்.
ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்?
யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதில் தரும் வகையில் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து NATO அமைப்பு ஆலோசித்து வருகிறது… அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது… சில உறுப்பு நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.
நேட்டோ என்றால் என்ன?
NATO என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின… இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்… ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது… 1955இல் NATO கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.
ரஷ்யா மீது தடைகள் விதித்தால் யாருக்கு பாதிப்பு?
வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின… இப்போது NATO அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
NATO மற்றும் யுக்ரேனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்சனை என்ன?
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் யுக்ரேன். அந்த நாடு இதுவரை NATOவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் NATO அமைப்பில் உறுப்பினராக சேர யுக்ரேன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.
ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' யுக்ரேன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார். ஆனால், அவரது கருத்துடன் முரண்பட்ட யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர், யுக்ரேனிய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி NATO மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு வேறு எதைப் பற்றி கவலைப்படுகிறது?
மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு NATO அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் NATO தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.
ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் NATO அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது. பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.
உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது. இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
யுக்ரேனுக்கு நேட்டோ அளித்த வாக்குறுதிகள் என்ன?
NATO வின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
எனினும், யுக்ரேனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் NATO கொண்டிருக்கவில்லை. இதேவேளை, யுக்ரேனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது.