ஆயிரங்களை k என்ற எழுத்தால் குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?
ஆயிரங்களை குறிப்பிடும்போது k என்ற எழுத்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக 10 ஆயிரம் ரூபா 10k என்றும் 1 லட்சம் ரூபா 100k என்றும் 1 லட்சம் ரூபாய் 100k என்று பயன்படுத்தப்படுகின்றன.
பணம் மட்டுமல்லாது பொதுவாகவே 1000 என்பதற்கு k என்ற எழுத்து பயன்பாட்டில் உள்ளது.
சுருக்கமாக இருப்பதால் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தாண்டி இதற்குப் பின்னால் காரணமும் இல்லாமலில்லை.
k என்பது கிலோய் எனப்படும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்படுகிறது.
இதன் உச்சரிப்பு khil-ee-oy என்பதாக இருப்பதால் k என்ற வார்த்தை அதன்மூலம் பொதுப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த கிலோய் வார்த்தைக்கு 'ஆயிரம்' என்று அர்த்தம். கிலோய் என்ற வார்த்தையை பிரஞ்சுகாரர்கள் கிலோ என மாற்றி பயன்படுத்தினர்.
இதன்படி ஆயிரம் என்று பொருள் வருமாறு மெட்ரிக் முறையில் கிலோ என்று கூறப்படுகிறது. கிலோகிராம் [1000 கிராம்], கிலோமீட்டர் [1000 மீட்டர்] என்பவை இதற்கு உதாரணமாகும்.