தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் பிரித்தானிய நிதி அமைச்சரின் மனைவி!
வரி காரணங்களுக்காக தான் பிரித்தானியாவில் வாழ்விடத்தை கொண்டிராத நபராக பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சர் ரிக்ஷி சுன்னக்கின் (Rishi Sunak) மனைவியான அக்க்ஷாடா மூர்த்தி (Akshata Murthy ) தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பதிவு செய்திருந்தால் பிரித்தானியாவுக்கு வெளியே உள்ள வருமானங்களுக்கு அவர் சட்ட ரீதியாக தனது வருமானகளுக்கு பிரித்தானியாவில் வரி செலுத்த தேவை இல்லை.
அதேசமயம் சுனக் அவர்களின் மனைவி சட்ட ரீதியாக அனைத்து வரிகளையும் செலுத்துவதாக அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரிக்குறை சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரின் குடும்பம் பெரும் நன்மைகளை பெற்றுவரும் என எதிர்க்கட்சியான தொழில் கட்சி தெரிவித்துள்ளது.
அக்ஷாடா மூர்த்தி (Akshata Murthy ) இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயன் மூர்த்தியின் மகள் ஆவார். இது குறித்து தொழில் கட்சியின் நிழல் நிதி அமைச்சர் தெரிவிக்கையில்,
ரிஷி சுனாக் (Rishi Sunak) மற்றும் அவரது மனைவி எவ்வளவு மற்றவர்களுக்கு வரியை அதிகரிக்கும் வேளையில், எவ்வளவு வரியை மிச்சம் பிடித்து உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை பிரித்தானிய அரசு அறிவித்த வரி அதிகரிப்பின் மூலம் 39 பில்லியன் அறவிடுவது நடைமுறைக்கு வரும் வேளையில் இந்த தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.