போட்டோ எடுக்க மறுத்த மனைவி; கொடூரமாக துன்புறுத்திய கணவருக்கு நேர்ந்த கதி

Viro
Report this article
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹவாயைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் கெர்ஹாட் கோனிக் (46 வயது). இவரது மனைவி ஏரியல் கோனிக் (36 வயது). அணுசக்தி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் விடுமுறையில் சுற்றுலாவுக்காக ஓஹூ தீவுக்கு சென்றுள்ளனர். சுற்றுலாவின்போது கெர்ஹாட் தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க அவரது மனைவி ஏரியல் கோனிக் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கெர்ஹாட், மனைவியை அடித்தும், பாறாங்கல்லால் தாக்கியும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளார். இதை நேரில் பார்த்த இருவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் முகம் மற்றும் தலையில் படுகாயமடைந்த ஏரியல் கோனிக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவராக உள்ள கெர்ஹாட் கோனிக்கை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.