11 ஆண்டுகளாக மனைவியின் உடலை ஆழ்கடலில் தேடிவரும் நபர்!

Tsunami Japan
By Sulokshi Oct 07, 2022 11:52 AM GMT
Report

  ஜப்பானில் சுனாமியில் சிக்கி மாயமான தனது மனைவியை 11 ஆண்டுகளாக கணவர் ஒருவர் தொடர்ந்து தேடி வரும் சம்பவம் தொடர்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமி

ஜப்பானில் 2011ல் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுனாமியால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி Onagawa என கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் Yasuo Takamatsu தமது மனைவியை சுனாமியில் தொலைத்துள்ளார்.

11 ஆண்டுகளாக மனைவியின் உடலை ஆழ்கடலில் தேடிவரும் நபர்! | Wife S Body 11 Years Japan Tsunami

2011 மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட இந்த Tōhoku சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடியிருப்பை இழந்ததுடன், 20,000 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் , 2,500 பேர்களின் சடலம் மீட்கப்பட்டாத நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், Yasuo Takamatsu தமது மனைவியை கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து தேடி வருகிறார்.

ஆழ்கடலில் மூழ்கி தேடுதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமது மனைவியை தேடி வந்த Yasuo Takamatsu, 2013ல் ஆழ்கடலில் மூழ்கி தேடுதலை தொடர்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.

11 ஆண்டுகளாக மனைவியின் உடலை ஆழ்கடலில் தேடிவரும் நபர்! | Wife S Body 11 Years Japan Tsunami

வங்கி ஊழியரான குறித்த பெண்மணியின் மொபைல்போனானது, அவர் பணியாற்றிய கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து Yasuo Takamatsu மீட்டுள்ளார். சுனாமி ஏற்பட்டு சில மாதங்களுக்கு பின்னர் அவரது மொபைல்போன் மீட்கப்பட்டதை அடுத்து, தமது தேடுதல் நடவடிக்கையை Yasuo Takamatsu தீவிரப்படுத்தியுள்ளார்.

தற்போது 65 வயதாகும் Yasuo Takamatsu வாரத்தில் ஒருநாள் ஆழ்கடலில் மூழ்கி தமது மனைவியின் உடலை தேடி வருகிறார். இநிலையில் கடலின் போக்கு காரணமாக அவரது உடலை தாம் மீட்காமல் போகலாம், ஆனால் தேடுவதை மட்டும் நிறுத்தப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 ஆண்டுகளாக மனைவியின் உடலை ஆழ்கடலில் தேடிவரும் நபர்! | Wife S Body 11 Years Japan Tsunami

 Tōhoku சுனாமிக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 9.1 ரிக்டர் அளவில் பதிவானது.

மேலும் ஜப்பானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் மட்டுமின்றி, மனிதகுல வரலாற்றில் மிக மோசமான 4வது பேரிடர் இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US