ஸ்பெயினில் உள்ள தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ! தீவிரமாக வேறியேற்றப்படும் மக்கள்
ஸ்பெயினில் உள்ள தீவு ஒன்றில் இன்றைய தினம் (15-07-2023) ஏற்பட்ட காட்டுத் தீயினால் அங்கிருந்தவர்களில் குறைந்தது 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த தீ விபத்தில் குறைந்தது 11 வீடுகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்தாக கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளவிஜோ தெரிவித்தார்.
தீ ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து “வெளியேற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 1,000ஐ எட்டக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் சுமார் 346 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அனைப்பதற்காக 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள் தரையில் இருந்த 4 ஹெலிகாப்டர்கள் மற்றும் 4 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.