ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ ; அச்சத்தில் மக்கள்
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் நகர் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாட்ரிட் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த காட்டுத் தீ காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து அழிந்துள்ளன.
இதேவேளை ஹெலிகொப்டர்கள் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் காட்டுத்தீயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.