நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் ; கடும் சீற்றத்தில் ட்ரம்ப்
ஹமாஸ் குறுகிய காலத்திற்குள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
காசா பகுதியில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் போக்கு தொடர்பான விவாதங்கள் நீடித்து வருகின்றன.

ஹமாஸ் தீவிரவாதிகள்
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-ஏ-லாகோ விடுதியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஹமாஸ் அமைப்பிற்குக் கடுமையான கெடு விதித்தார்.
‘ஹமாஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டனர். அதன்படி அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்’ என எச்சரித்தார்.
மேலும், ‘அவர்கள் இதற்கு இணங்காவிட்டால், அவர்களை அடியோடு அழிக்கப் பல நாடுகள் தயாராக உள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.