ஜனாதிபதி பதவியை தொடர விருப்பம் ..ஆனால்..;டிரம்ப் பதில்
'எனக்கு மிகவும் விருப்பம்தான் ஆனால் சட்டம் வலுவானது' என 2028 தேர்தல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது,
எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது. மற்றொரு முறை போட்டியிடுவதை வரவேற்கிறேன்.

டிரம்ப் போட்டியிட முடியாத சூழல்
ஆனால் சட்ட வரம்புகள் என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது. எனது அரசியல் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்ப சட்டம் வெளிப்படையாகத் தடுக்கிறது.
எல்லோரும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மேலும் அந்த விஷயத்தில் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது . இருந்தாலும், எனக்கு பதவிக்காலத்தைத் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறது என அதிபர் டிரம்ப் கூறினார்.
அதேசமயம் அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது.
இதனால் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.