செவ்வாய் குறித்த ஆய்வுக்குழுவில் கனடிய விஞ்ஞானி
செய்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் குழுவில் கனடிய விஞ்ஞானி ஒருவர் இடம் பிடித்துள்ளார்.
கனடாவின் வின்னிபிக் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் எட் கிளவுட் என்பவர் இந்த குழுவில் இணைந்து கொண்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் உயிர் இனங்கள் இருக்கக்கூடிய தடயங்கள் தொடர்பில் ஆராய்ச்சி முன் எடுக்கப்பட்டு வருகின்றது.
நாசாவின் விசேட விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை ஆய்வு செய்து அது குறித்த மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய் கிரகத்தில் தற்பொழுது உயிர் உயிரினங்கள் இல்லை என்றாலும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற ஓர் சூழல் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனவே சில வேலைகளில் அந்தக் காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உயிர் வாழக்கூடிய சாத்தியங்கள் உண்டா என்பது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சில வேலைகளில் கடந்த காலங்களில் உயிர் இனங்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவை பின்னர் அறிந்திருக்கலாம். எனவும் பேராசிரியர் கிளைவுட் கூறுகின்றார்.
இந்த ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமானவை எனவும் இது தொடர்பில் நீண்ட ஆய்வுகளின் பின்னரே முடிவுகளை துல்லியமாக அறிவிக்க முடியும் எனவும் பேராசிரியர் கூறுகின்றார்