ரொறன்ரோவில் காலநிலை குறித்து எச்சரிக்கை
கனடாவின் தென் ஒன்றாரியோ மற்றம் ரொறன்ரோ பகுதியில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு நிலவும் எனவும் மழை வீழ்ச்சி ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் சீரற்ற காலநிலையானது, பனிப்புயலாக விரிவடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் செவ்வாய் காலை பத்து சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய், மாலையில் 20 முதல் 40 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலையினால் குறிப்பாக பனிப்பொழிவு நிலைமைகளினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பியர்சன் விமான நிலையம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்படவில்லை.