ஒரே ஒரு டிக்கெட்டால் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிக்ஷ்டம்!
இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அதிர்ஷ்டம் என்பது கூரையை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. கணவர் பல வருடங்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். ஆனால் தற்போது வரை லாட்டரியில் இருந்து ஒரு ரூபாய் கூட அவரால் வெல்ல முடியவில்லை.
ஆனால், அவரது மனைவி முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கி முதல் முறையாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களாவை வென்றார். பென் என்ற அந்நபர் பல ஆண்டுகளாக ஓமேஸின் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்தது.
இருந்தாலும் இந்த முறை லாட்டரி வாங்க மறந்துவிட்டார். இதை அடுத்து, அவரது 32 வயது மனைவி பெக்காவுக்கு திடீரென்று கணவர் வழக்கமாக லாட்டரி வாங்குவது நினைவுக்கு வந்தது.
தனது கணவர் ஒமேகாவிற்கு உதவும் நோக்கில் மனைவி பெக்கா பாட், தனது கணவருக்கு தெரிவிக்காமல் 1000 ரூபாய் லாட்டரியை வாங்கியுள்ளார். அவரின் இந்த செயல் கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
வெறும் 1000 ரூபாய் லாட்டரியில் அடைந்த பரிசினால், 2 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் இருந்து நேரடியாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களா கிடைத்ததாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பங்களாவின் உரிமையாளரானதாகவும் மனைவி பரவசத்துடன் கூறினார்.
பெக்கா சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயானார் என்பதால், அவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர் தவறாமல் ஒவ்வொரு முறையும் ஓமேஸ் லாட்டரியை வாங்குவார். ஆனால், இம்முறை வேலை பளு காரணமாக டிக்கெட் வாங்க மறந்துவிட்டார்.
எனவே மனைவி ஆன்லைனில் டிக்கெட் வாங்கினார். இதுபற்றி அவர் கணவரிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், லாட்டரியைத் திறந்து அவளுடைய எண்ணைப் உள்ளிட்ட போது, மனைவிக்கு வானத்தில் பறப்பதை போல் உணர்ந்தார். அதன் பிறகு அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த நிலையில் இருவரும் 35 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பங்களாவை வென்ற அந்த தம்பதி, இனி மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.