லண்டனில் உயிரிழந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் குழந்தை; வெளிவரும் பகீர் தகவல்!

Crime Police Baby Mother Court Indian Hounslow Shiwangi Bagoan Ziana Bagoan
By Sulokshi Apr 09, 2022 05:29 AM GMT
Report

லண்டனில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இளம் பெண் ஒருவரும் குழந்தையும் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இவர்களின் மரணம் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த பெண்னின் பெயர் ஷிவாங்கி (Shiwangi Bagoan (25) என்றும், அவரது மகள் என்றும், சிறுமியின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்தது.

மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தாயும் மகளும் தங்கியிருந்த நிலையில், ஷிவாங்கியின் தாயாகிய Jassumatu, தன் மகளிடமிருந்து பல நாட்களாக அழைப்பு எதுவும் வராததால் அவரைத் தேடிச் சென்றபோது , தாயும் ,குழந்தையும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதன்போது, அவர்களது கைகளில் குளூக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி பொருத்தப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு அருகில் ஷிவாங்கி தன் தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. கடிதத்தில்,

அன்புள்ள அம்மா, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய கஷ்டம் கொடுத்துவிட்டேன், என் மகளையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன், அவளை சுயநலமாக உங்களுடன் விட்டுவிட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. எங்களுக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்திருக்கிறீர்கள், பதிலுக்கு நான் உங்களுக்கு மன அழுத்தத்தைத்தான் கொடுத்திருக்கிறேன் என ஷிவாங்கி எழுயிருந்தார்.

லண்டனில்  உயிரிழந்த  இந்திய வம்சாவளி பெண் மற்றும் குழந்தை;  வெளிவரும் பகீர் தகவல்! | Woman And Child Of Indian Who Died In London

இந்நிலையில் தாய் மற்றும் குழந்தையின் மரணம் தொடர்பில் நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில்,நேற்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் ,

ஷிவாங்கி செவிலியராக மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில் , ஷிவாங்கி பணியில் செய்த தவறு காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் 2020 ஜூலையில் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்ற ஷிவாங்கி, மீண்டும் 4.20க்கு வீடு திரும்பியுள்ளார். அந்த காட்சிகள் சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியுள்ளன.

அத்துடன் அவர் மருத்துவமனைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்ததாக கருதப்படுகிறது. வீடு திரும்பிய ஷிவாங்கி, தான் மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்த அந்த மருந்தை தன் மகளுக்குச் செலுத்திவிட்டு, தானும் அதே மருந்தைச் செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ஷிவாங்கி மருத்துவமனையிலிருந்து அலுவலர்களுக்குத் தெரியாமல் மருந்து ஒன்றை எடுத்து வந்து, அதை ஊசி மூலம் செலுத்தி தன் மகளை சட்ட விரோதமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்ற விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேவேளை ஏற்கனவே, ஷிவாங்கி 2017ஆம் ஆண்டு மருந்து ஒன்றை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

மேலும் தற்போது அவர் தன்னையும் தன் மகளையும் கொல்ல பயன்படுத்திய அதே மருந்தை அப்போது திருடியதற்காகத்தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US