பறக்கும் விமானத்தில் மோசமாக நடந்து கொண்ட பெண் கைது
கனடாவில் விமானத்தில் மோசமாக நடந்து கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவிலிருந்து எட்மோன்டன் நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் குறித்த பெண் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எட்மோன்டன் விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சிசுவை துன்புறுத்தியதாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த பெண் விடுவிக்கப்பட்டதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.