கனடாவில் தீ வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் கைது
கனடாவின் புத்ரஸ்ட் எனும் பகுதியில் தீ வைப்புச் சம்பவங்களை மேற்கொண்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 வயதான பெண் ஒருவரை இவ்வாறு போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்ரஸ்ட் மற்றும் செப்பர்ட் அவன்யூ வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடியிருப்பு தொகுதிகளுக்கு அருகாமையில் இந்த பெண் தீ வைப்புச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில கட்டிடங்கள் மீது தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. இந்த தீ வைப்பு சம்பவங்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
30 வயதான வேலன்டினா பொபோவா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.