வங்கிக்குள் நுழைந்து சொந்த பணத்தை கொள்ளையடித்த பெண்!
லெபனான் நாட்டில் வங்கிக்குள் புகுந்து ஒரு பெண் தனது பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சலி ஹபீஸ் என்ற பெண் தனது வங்கி சேமிப்புத் தொகை 13,000 டொலரை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் கெடுபிடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் வங்கிக்குள் புகுந்து பொம்மைத்துப்பாக்கியைக் காட்டி தனது சொந்த பணத்தை கொள்ளையடித்திருக்கிறார். லெபனான் கடும் பண நெருக்காடியால் சிக்கித் தவித்து வரும் நிலையில், வங்கிகளில் பணம் எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
சலி ஹபீஸின் சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தன் சகோதரியின் சிகிச்சைக்காக தன்னுடைய சேமிப்புப் பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
A woman in Beirut today held up a bank, not to rob, but to withdraw her own money, needed to pay for her sister's cancer treatment. Same thing happened at a bank in Aley. The actions were coordinated by a depositors union, which represents people whose money the banks have stolen pic.twitter.com/57109pNrLQ
— Liam (@Hezbolsonaro) September 14, 2022
ஆனால் மாதத்துக்கு 200 டொலா் மட்டுமே எடுக்க முடியும் என்று வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் இணைந்து வங்கிக்குள் புகுந்து பொம்மைத்துப்பாக்கியைக் காட்டி அதிகாரிகளை மிரட்டி, பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்.
அதேவேளை லெபனானில் ஏராளமான மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.