ஒன்டாரியோவில் 62 வயது சகோதரியை கொலை செய்த சகோதரி
கனடாவின் ஒன்டாரியோவில் ஸ்மித்வில்லே, கடந்த ஆண்டு நடந்த 62 வயது பெண் கேதி ப்ரோச்ஜேவை கொலை செய்ததாக அவரது சகோதாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
55 வயது சகோதரியான கரோலின் ப்ரோச்ஜே மீது தற்போது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என நயாகரா பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்குமுன், கடந்த ஜனவரியில் கரோலின் ப்ரோச்ஜே மீது "கொலைக்குப் பிந்தைய குற்றத்துக்குத் துணை" என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
2024 ஏப்ரல் 26ஆம் திகதி, லிண்டன் வீதி மற்றும் ஆல்மா டிரைவ் சந்திப்பில் உள்ள இருவரும் சேர்ந்து வாழ்ந்த வீட்டிலேயே கேதி ப்ரோச்ஜே இறந்த நிலையில் காணப்பட்டார்.
கரோலின் ப்ரோச்ஜே தற்போது காவலில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக, 43 வயதான ஜோசப் வில்ல்நெஃப் என்பவரும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனுடன் இணைந்த இரண்டாவது விசாரணையின் போது, ஜோசப் வில்ல்நெஃப் மீது கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின், பொலிஸாரை 905-688-4111 (அலகு 3, நீடிப்பு 1009533) என்ற எண்ணில், அல்லது Crime Stoppers (1-800-222-8477) என்ற எண்ணில் இரகசியமாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.