அஜாக்ஸில் பல வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு
அஜாக்ஸில் நேற்றைய தினம் பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.
அஜாக்ஸ் — டர்ஹாம் பிராந்திய பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிற்பகல் 1:30 மணியளவில், கிங்ஸ்டன் சாலை மேற்கு மற்றும் எலிசபெத் வீதி சந்திப்பில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சமூக வலைத்தளமான X-இல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் ஒரு ஆண் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் விபத்து நேர்ந்த சூழ்நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.