பிரிட்டனில் பொலிசாரால் இளம் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்: வெளியான புகைப்படம்
பிரிட்டனின் லிவர்பூல் பகுதியில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட நபரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லிவர்பூல் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு சுமார் 8.10 மணியளவில் ஷீல் சாலையில் அவர் நடந்து செல்கையில், அவர் மீது பொலிஸ் வாகனம் மோதியுள்ளது.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர் முதலுதவி அளித்துள்ளனர். ஆனால் அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பொலிஸ் வாகனம் மோதி பலியானவர் 22 வயதான ரேச்சல் லூயிஸ் மூர் என தெரிவித்துள்ளதுடன், அவர் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
தற்போது ரேச்சலின் குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு அதிகாரிகள் குழு விசாரணை முன்னெடுக்கும் எனவும் அறிவித்துள்ளனர்.
அத்துடன், நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், அதிகாரிகள் தரப்பை நாடி விளகமளிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பில் எவரேனும் காணொளியாக பதிவு செய்திருந்தால், அதையும் அதிகாரிகளிடம் பகிர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.