சீனாவில் முதுகுவலி போக தவளைகளை விழுங்கிய மூதாட்டி
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை.
இந்நிலையில் தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.
ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள்
அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது