பெண் ஒருவருக்கு உயிராபத்து ஏற்படுமாறு துன்புறுத்தல் மேற்கொண்ட நபரை தேடும் பொலிஸார்
உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் 46 வயதான பெண் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஹமில்டன் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துன்புறுத்தப்பட்ட குறித்த பெண் நேற்றைய தினம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பார்டோன் வீதி கிழக்கு மற்றும் விக்டோரியா அவன்யூ ஆகிய பகுதிகளில் அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகாத முறையில் துன்புறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனால் அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.