பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் கொலை செய்த பெண் ; சம்பவத்தால் ஷாக்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என்பது தெரியவந்துள்ளது.
32 வயதான அவர், சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

49 வயதான பமீலா சிஸ்னெரோஸ்
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற எரின், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் வணிகத்தேர்வு மற்றும் மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரிவில் துணை தலைவராக பணியாற்றி வந்தார்.
ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் சட்ட பட்டமும் பெற்றிருந்தார். அவரது கணவர் ஃபிராங்க் பியாசென்டியும் அதே காலகட்டத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.
கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் எரின் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை கவனிப்பதற்காக ஐந்து மாதங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் என்ற பெண்ணை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
அவருக்கு கடந்த காலங்களில் மனநல பிரச்சினைகள் தொடர்பாக போலீசாருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.