எகிப்தில் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.