கட்டடம் இடிந்து வீழ்ந்து 50 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்ட பெண்
கட்டடம் இடிந்து வீழ்ந்து ஐம்பது மணித்தியாலங்களின் பின்னர் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மத்திய சீனாவில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் அதில் சிக்குண்டதுடன் பலர் காணாமல் போயிருந்தனர்.
இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கட்டடத்தின் உரிமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டடம் இடிந்து வீழ்ந்ததனை தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, கட்டடத்திற்குள் யாரோ அபயக்குரல் எழுப்பும் சத்தம் கேட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த கட்ட்டம் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. போலியான தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன.