பிரான்ஸில் பெண் கொடூரமாக கொலை; கணவன் கைது
பிரான்ஸில் கண்கள் தோண்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Saint-Cloud (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
Rue Albert Ier வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து 50 வயதுடைய பெண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

58 வயதுடைய கணவர் கைது
இதன்போது கண்கள் இரண்டும் தோண்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு மிக கொடூரமான நிலையில் சடலம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் 58 வயதுடைய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருந்ததாகவும், அறை முழுவதும் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததாக தெரிவிக்கபப்டும் நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.