ராஜினாமா கடித்தை கழிப்பறை பேப்பரில் எழுதி அனுப்பிய பெண்!
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்த ஏஞ்சலா யோ என்பவர் தனது வேலையை ராஜினாமா கடித்தை கழிப்பறை பேப்பரில் எழுதி அனுப்பியமை வைரலாகியுள்ளது.
தனது நிறுவனம் தன்னை சரியாக நடத்தாதது குறித்து வருத்தமடைந்த ஏஞ்சலா, தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் டிஸ்யூ பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். இதை தனது லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா தனது வேலையிட சூழல் குறித்து பகிர்ந்துகொண்டார்.
லிங்கின்ட்-இன் பக்கத்தில் பகிர்ந்த ஏஞ்சலா
அவர் தனது பதிவில், "இந்த நிறுவனம் என்னை எப்படி நடத்தியது என்பதற்கான அடையாளமாக இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமாவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல நான் உணர்ந்தேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் ஊழியர்களை சின்ன சின்ன விஷயங்களுக்காக பாராட்டுவதால் கூட பெரிய பெரிய மாற்றங்கள் நடக்கும்.
பாராட்டு என்பது தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏஞ்சலாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.