கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு காபி வாசனையை உணர்ந்த பெண்! கண்ணீர் விட்டு அழும் காட்சி
கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு காபி வாசனையை சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 54 வயதான ஜெனிபர் ஹென்டர்சன் என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்ற தொற்று அறிகுறிகள் ஒரு வாரத்திலேயே சரியானது.
சுவையை உணர முடியவில்லை
எனினும் சுவை உணர்வு பாதிக்கப்பட்டது. அவரால் பூக்கள் வாசனை, பெரும்பாலான உணவுகளின் சுவையை உணர முடியவில்லை. இதனால் அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் கூட வெறுப்பாக மாறியது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் ஸ்டெலேட் கேங்க்லியன் பிளாக் (எஸ்ஜிபி) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார்.
இம்முறையில் அவரது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக அவரது வாசனை உணர்வு பிரச்சினை படிப்படியாக சரியானது.
இதனால் சுமார் 2 வருங்டங்களுக்கு பிறகு அவரால் சாதாரணமாக காபி வாசனையை உணர முடிந்துள்ளது.
ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த தருணம் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.