பன்றியின் கல்லீரல் மூலம் உயிர் காக்கப்பட்ட பெண் 30 ஆண்டுகளின் பின்னர் காலமானார்
1994ஆம் ஆண்டில் பன்றி கல்லீரல் (pig liver) மூலம் உயிர் காக்கப்பட்ட மேவிஸ் "கொன்னி" மெக்கார்டில் (Mavis “Connie” McArdle) என்ற மூதாட்டி, தனது 86வது வயதில் காலமானார்.
கடந்த 10ம் திகதி குறித்த பெண் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
மெக்கார்டில், அவசரகதியான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை (liver transplant) தேவைப்பட்ட நிலையில், மொன்ரியல் ஜெனரல் மருத்துவமனையின் ஆராய்ச்சி பிரிவில் இருந்து பன்றி கல்லீரலை வெளியில் இணைத்து ஒரு தற்காலிக உயிர்காக்கும் முறையாக பயன்படுத்தினர்.
மெக்கார்டில் கல்லீரல் செயலிழப்பு காரணமாக கோமா (coma) நிலைக்கு சென்ற போது, ராயல் விக்டோரியா மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transplant) பிரிவு தலைவர் டாக்டர் ஜீன் செர்வென்கோவ் (Dr. Jean Tchervenkov) தலைமையிலான மருத்துவ குழு, பன்றி கல்லீரலை வெளியில் இணைத்து இரத்தத்தை வடிகட்ட முடிவு செய்தனர்.
பன்றி கல்லீரலை மெக்கார்டிலின் நரம்புகளுடன் இணைத்து, ஒரு டயாலிசிஸ் (dialysis) இயந்திரம் போல் இரத்தம் சுத்திகரிக்க செய்யப்பட்டது.
இது ஒரு நாளுக்கு மேலாக அவரை உயிருடன் வைத்திருந்தது. மறுநாள், ஒரு மனித கல்லீரல் கிடைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், மெக்கார்டில் பிழைத்தார். சிகிச்சையின் பின்னர், "நான் இன்னும் 20 வருடங்கள் வாழ விரும்புகிறேன்" என்று அவர் 1994ஆம் ஆண்டு கூறினார்.
ஆனால், அவர் 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, தனது 86வது வயதில் இறந்தார். இறப்புக்கு முன் அவர் கூறிய உருக்கமான வார்த்தைகள்: 2014ஆம் ஆண்டு, "என் உயிர்தானம் கொடுத்தவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கைகளை கடவுள் வழிநடத்த வேண்டும்" என கூறியிருந்தார்.