கனடாவில் நீச்சல் குளத்தில் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்ட பெண்!
கனடாவின் நீச்சல் குளங்களில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.
மில்டன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு பொது நீச்சல் குளங்களை குறித்த பின் அசுத்தப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் இந்த சம்பவங்கள். குறித்த பெண் நீச்சல் குளத்தில் மலக்கழிவு மற்றும் சாக்லேட் போன்றவற்றை கலந்து நீரை அசுத்தப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹால்டன் பிராந்திய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
மில்டன் ஸ்போர்ட்ஸ் சென்டர் மற்றும் மில்டன் லெஷர் சென்டர் ஆகியனவற்றில் அமைந்துள்ள பொது நீச்சல் தடாகத்தில் இந்த சம்பவங்கள் பதிவாக்கியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 12-ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த பெண் நீச்சல் குளங்களை அசுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயல்காரணமாக ஏனையவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் செயற்பாடு காரணமாக நீச்சல் குளங்களை மூட நேரிட்டதாகவும் இதனால் குறிப்பிடத்தக்களவு நட்டம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்ட அடிப்படையில் நீச்சல் குளத்தை அசுத்தப்படுத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
33 வயதான பெண் ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.