விமான நிலயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட பெண்
ரஷ்யாவில் இளம் பெண் விமான நிலயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் Sheremetyevo Alexander S. Pushkin சர்வதேச விமானநிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக காத்துக் கொண்டிருந்துள்ளார்.
குடிபோதையில் இருந்த அவர் பின் திடீரென்று அங்கிருந்த ஊழியர்களை அவமதிததுடன், பயணி ஒருவரிடமும் தகராறில் ஈடுபடுவது போன்ற காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண், Sheremetyevo Alexander S. Pushkin குடிபோதையில் தகராறி ஈடுபட்டார்.
இதையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் அவதூறாக நடந்து கொண்டதை அடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
எனினும் , அப் பெண் இந்தளவிற்கு கோபமடைந்து தகராறில் ஈடுபட்டார் என்பது தெளிவாக தெரியவராதபோது , குடித்துவிட்டு விமானநிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



