ஜெர்மனியில் ஊதியத்தில் சம உரிமை கேட்கும் பெண்கள்!
ஜெர்மனியில் பெண்களுக்கும் ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜெர்மனியில் ஆண்களுக்கு பெண்கள் சளித்தவர்கள் அல்ல என்ற ஒரு நிலைபாட்டில் பெண்களுடைய ஊதியங்கள் ஆண்களுக்கு சக நிகராக வழங்கப்பட வேண்டும் என்பது பலருடைய வேண்டு கோள் ஆக அமைந்துள்ளது.
தற்பொழுது ஜெர்மனியில் வேலைவாய்ப்பு சம்பந்தமான உச்சநீதி மன்றமானது பெண்களுக்கு ஆதரவான சில முடிவுகளை எடுத்து இருக்கின்றது. அதன்படி ட்றேஸன் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துள்ளார்.
அந்த பெண் பின்னர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளியேறியவுடன் ஆண்களுக்கு நிகராக வழங்கப்பட வேண்டிய மிகுதி பணத்தை தனக்கு தான் வேலை செய்த நிறுவனம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அனுகியதாக தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த உச்ச நீதிமன்றமானது இந்த பெண்ணிற்கு அந்த நிறுவனமானது மொத்தமாக 11500 யுரோக்களை மேலதிக கொடுப்பனவுகளாக வழங்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவ்வகையான தீர்ப்பானது பெண்களுடைய நிலைப்பாட்டை உயர்த்தும் என்று பல அவதானிகள் தெரிவிக்கின்றார்கள்.