மகளிர் T20-வில் புதிய மைல்கல் ; வரலாறு சாதனை படைத்த ஷப்னிம் இஸ்மாயில்
மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் படைத்துள்ளார்.
இந்நிலையில், மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அத்துடன், 2026 மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடி இவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் நடப்பாண்டில் ஐ.சி.சி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 2ஆவது அரையிறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்தது.
இந்நிலையில்,முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இரண்டாவதாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது.
மேலும், இங்கிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், ஷப்னிம் இஸ்மாயில் தனது முதல் 2 ஓவர்களில் தலா 1 விக்கெட் வீழ்த்தி இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.