கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பையின் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.
உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வான அணிகள் தங்களது அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத உலகக்கோப்பையில் சின்ன சின்ன அணிகள் கூட பெரிய பெரிய சம்பவங்களை செய்துள்ளன. எனவேதான் ரசிகர்கள் மத்தியில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 10 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்தப் போட்டித் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்படி ஒட்டுமொத்தமாக 82 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கோப்பையை வெல்லும் அணிக்கு 33 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 17 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அரையிறுதியில் தோல்வியைத் தழுவும் அணிகளுக்கு தலா 6 கோடியே 60 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
குழுப் போட்டியுடன் வெளியேறும் அணிக்கு 82 லட்சம் ரூபாயும், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு 33 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் 46 நாட்களுக்கு இந்தத் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.