உக்ரைன் ராணுவத்தில் இணைந்த உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரர்
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 வீரர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு திறமை பெற்ற ஸ்னைப்பர் 'வாலி' என்ற போர் வீரர் உக்ரைன் ராணுவத்தில் இடம்பெற்றுள்ளார்.
இவரைப் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. கடந்த மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது.
இன்றைக்கு தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முள்னேற ஆரம்பித்துள்ளன. உக்ரைன் தொடர்ந்து எதிர்த்தாக்குதல் நடத்தி வந்தாலும், வலுவான ரஷ்ய படைகளுக்கு முன்பு அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இதுவரை இழந்த பகுதிகளில் எதனையும் உக்ரைன் ராணுவத்தால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தில் இடம்பெற்றுள்ள உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரராக கருதப்படும் 'வாலி' குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.