உலகின் வயதான மரத்தான் ஓட்ட வீரர் சாலை விபத்தில் பலி
" தூர்பான் தாக்கதாரி புயல்” என செல்லப்பெயர் பெற்ற உலகின் வயதான மரத்தான் ஓட்ட வீரர் ஃபௌஜா சிங், 114வது வயதில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த ஓர் வாகன விபத்தில் உயிரிழந்தார்.
வாகன சாரதி சிங்கை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் 1911-ம் ஆண்டு இந்தியாவின் ஒரு கிராமத்தில் பிறந்து, பின்னர் லண்டனில் புகலிடம் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 89வது வயதில் மரத்தான் ஓட்டத்தைத் தொடங்கிய ஃபௌஜா சிங், 26.2 மைல் நீளமுள்ள ஒன்பது மரத்தான் ஓட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தன் மனைவி மற்றும் மகனை இழந்த பின், இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்ததும், மன அழுத்தத்திலிருந்து விடுபட ஓட்டப்பயிற்சியை தொடங்கியவர்.
“ஓட்டம் எனக்கு வாழ்க்கையை மீண்டும் அளித்தது. என் துயரங்களை மறக்கச் செய்தது,” என அவர் 102வது வயதில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் மாநிலம், பீஸ் கிராமத்துக்கு அருகே, சாலையில் நடந்து சென்ற ஃபௌஜா சிங்கை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி தப்பிச் சென்றது.
ஜலந்தர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தலையில் மற்றும் விலா எலும்பில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக ஜலந்தர் மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி ஹர்விந்தர் சிங் விருக்க் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காணொளிகள் மூலமாக வாகனத்தை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “அசாதாரண முயற்சி, உறுதி, மற்றும் நேர்மையுடன் வாழ்ந்த மாமனிதர்” என புகழ்ந்ததோடு, தேசியளவில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.