உலகில் முதன் முறையாக கனடாவில் அறிமுகமாகும் விசேட கழிப்பறை
உலகில் முதன் முறயைாக கனடாவில் வித்தியாசமான கழிப்பறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனித கழிவுகளை முழுமையான இயற்கை முறையில் உரமாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்துடன் இந்த கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தாவரவியல் பூங்காவில் இந்த நவீன கழிப்பறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பூங்காக்கள் மற்றும் தொலைதூர இடங்களில் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கழிப்பறையில் திட மற்றும் திரவக் கழிவுகள் வேறுபடுத்தப்பட்டு உரமாக மாற்றும் செயன்முறை முன்னெடுக்கப்படுகின்றது.
களான்களின் வேர்களைக் கொண்டு இந்த மனித கழிவுகளை உரமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயன்முறைக்கு மின்சாரம், நீர் அல்லது வெறும் இரசாயனப் பொருட்கள் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.