உக்ரைன் போரால் வறுமையில் தள்ளப்படும் உலகமக்கள்; ஐ.நா வெளியிட்ட தகவல்!

Russia People Ukraine war increase Poverty Prize Un Thinks
By Independent Writer Apr 18, 2022 05:39 AM GMT
Independent Writer

Independent Writer

Report

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் நாடு மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி படையெடுத்தது. ரஷ்யா நடத்தி வரும் இந்த போர் இன்று 54வது நாளாக நீடித்து வருகிறது.

போரில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். போரை நிறுத்த ஐ.நா. அமைப்பு, போப் பிரான்சிஸ்(Pope Francis), அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க போரானது தொடர்ந்து வருகிறது. போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

இந்த போரால் மனித இனத்தில் 5ல் ஒரு பங்கு சதவீதத்தினருக்கும் கூடுதலானோர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் (Antonio Cutters)கவலை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செக் குடியரசு நாட்டின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உக்ரைனில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள சோகங்களை நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால் போரால், அந்நாட்டு எல்லைகளை கடந்து, வளர்ந்து வரும் நாடுகள் மீதும் மவுன தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், மனித இனத்தில் 5ல் ஒரு பங்குக்கும் மேலான மக்கள் வறுமை மற்றும் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்பட கூடும். பல தசாப்தங்களாக நாம் காணாத நிலையை எட்ட கூடும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, உலக அளவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் பார்லியை 30 சதவீதம் உற்பத்தி செய்கின்றன. 5ல் ஒரு பங்கு சோளமும், பாதிக்கும் மேலாக சூரியகாந்தி எண்ணெயும் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள், மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன. இந்த போரால், தானிய ஏற்றுமதி தடைப்பட்டு உள்ளது. வினியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. நடப்பு 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றின் விலை 30 சதவீதம் உயர்ந்து விட்டது.

கச்சா எண்ணெய் விலையும் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்வடைந்து உள்ளது. எரிவாயு மற்றும் உரம் ஆகியவை இருமடங்கிற்கும் கூடுதலாக விலையேற்றம் அடைந்து உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US